search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விரைவில் நிலைமை சீராகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    விரைவில் நிலைமை சீராகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்கள் அனுப்பி வைப்பு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள குக்ஸ் சாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படகு மூலம் நிவராண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிச்சாங் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.

    வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

    மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×