என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

(கோப்பு படம்)
திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
- இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்.
- ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும் திமுக தலைமை வலியுறுத்தல்.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் 12 ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் கூறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story






