search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்
    X

    மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்

    • “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை "பிங்க் அக்டோபர்" என்ற பெயரில் மார்பக புற்று நோய் குறித்து பொது மக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் 9 ஆயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் இறப்பதை ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவதை முற்றிலும் அகற்றும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக் டர் கலைச்செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் காரைப் பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×