என் மலர்
காஞ்சிபுரம்
- கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. கொலை திட்டத்தை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ரவுடி வசூல்ராஜா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா 2 கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகராறில் கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க ரவுடிகளிடையே தொடர்ந்து மோதல் மற்றும் கொலைகள் அரங்கேறி வந்தன. எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது வசூல் ராஜாவால் தீர்த்து கட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் திட்டமிட்டு இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- 6 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜா மீது குண்டு வீசி வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடினர்.
- பழிக்குப்பழியாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு என்ற பகுதியில் வசூல்ராஜா என்ற ரவுடி வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் வசூல் ராஜா மீது குண்டு வீசி வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடினர்.
வசூல் ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பழிக்குப்பழியாக ரவுடி கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
- பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
காஞ்சிபுரம்:
திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தற்போது சினிமா திரைப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெறுகிறது. இந்த வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால் அதிக செலவுகள் செய்து பிரமாண்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் மணப்பெண்ணை சைக்கிளில் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை ஊர்வலக அழைத்து வந்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும், யோகலட்சுமிக்கும் திருமண நிச்சயதார்த்த விழா காஞ்சிபுரம் அடுத்து ஓரிக்கையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக மண்டபத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலில் இருந்து மணப்பெண் யோகலட்சுமியை சைக்கிளின் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை மனோஜ் ஊர்வலமாக ஓட்டி வந்தார். அவர்களை பின்தொடர்ந்து உறவினர்கள் உற்சாக குரல் எழுப்பினர். விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்கிடையே திருமண மண்டபவாசலுக்கு வந்ததும் யோகலட்சுமியை அவரது சகோதரர்கள் 4 பேரும் பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் நடைபெறுகிறது.
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
- 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
காஞ்சிரபுரத்தில் நடந்த விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது,
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்று கூறினார்.
4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
அவருக்கு கேட்கிறேன் நாங்கள் ஆடியது நாடகம் என்று சொன்னால், நாடகத்தில் நீங்கள் வில்லன் வேடமா...? காமெடி வேடமா...? என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா?
4 மணி நேர நாடகத்தில் நீங்களும் உட்கார்ந்துவிட்டு, நடித்தது வில்லன் வேடமா? காமெடியன் வேடமா? ஆக கூட்டத்தை அவர்களால் எந்த குறையும் சொல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
- விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). இன்று காலை அவர் வீட்டு முன்பு கோல மிட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் தனது தந்தை பயன்படுத்தும் காரை ஓட்டினார்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தாறுமாறாக ஓடி வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்த சரஸ்வதி மீது மோதியது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. போலீசார் விரைந்து வந்து காரை ஒட்டிய மாணவரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் பலியான சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் தந்தை வீட்டில் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை தயார் செய்து கார் மூலமாக அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். அந்த காரை இன்று காலை மாணவன் ஓட்டியபோதுதான் தறி கெட்டு ஓடி வீட்டு முன்பு கோலமிட்ட மூதாட்டியின் உயிரை பறித்து விட்டது.
அந்த நேரத்தில் அவ்வழியே மற்றவர்கள் வராததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்.
- தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
தொடர்ந்து சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை கடந்த ஜனவரி 4 -ந்தேதி பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து அடுத்தநாள் மோகன்ராஜ், சிவநேசன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
16-வது நாளாக சி.ஐ.டி.யு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சாம்சங் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்திய நிலையில் 13 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்டு செய்யப்பட்ட 13 ஊழியர்களும் சிஐடியூ-வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
- ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
காஞ்சிபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கவர்னரே வேண்டாம் என்கிறோமே. கவர்னர் கவர்னராக செயல்படவில்லை. ஒரு அரசியல்வாதியாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
* ஐஸ் என்று சொல்லுவோம் வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறை. இப்போது கவர்னர்களை 4-வது கரமாக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பிரச்சனையை உருவாக்குவதற்காக தொடர்ந்து எதிராக செயல்படுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
* எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்கக்கூடிய பொறுமை ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆளும் பா.ஜ.க.வுக்கு இல்லை. எந்த எதிர்வாதமாக இருந்தாலும் யார் பேசினாலும் சரி எதிர்க்கட்சிகள் சொல்லக்கூடிய கருத்துகளை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.
* நாங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கோ, எழுப்பக்கூடிய பிரச்சனைகளுக்கான விவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கக்கூடிய விவாதங்களுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை என்பதே உண்மை.
* ஜனநாயகத்தின் மீது பாராளுமன்றத்தின் மீது இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
* இதுபோன்று பேசியவர்கள் பலரை அறிவாலயம் பார்த்திருக்கிறது. தி.மு.க. பார்த்திருக்கிறது. யார், யாரை பிரிப்பது என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி அளித்தார்.
- 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
- 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.
இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
- ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
- நிகழ்ச்சியில் ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்க காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் சிக்கராய புரத்தில் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாள் மார்ச் 1-ந் தேதி வருகிறது.
அன்றைய தினம் காஞ்சி வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி, தொட்டியெங்கும் மிகவும் சிறப்பான வகையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவது என்றும், மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கிடுவது என்றும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு, உடைகளை வழங்கிடுவது என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
முதலமைச்சரின் தன்னலமற்ற உழைப்பையும், அவர் கழகத்திற்காக ஆற்றிய அரும் பெரும் பணிகளையும், 4 ஆண்டு கால ஆட்சியின் அளப்பறிய சாதனைகளையும், நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் மார்ச் 1-ம் தேதி முதல் மாதம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்திடுவது, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகளை வழங்குவது என்றும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் மார்ச் 1-ஆம் தேதி அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, பொருளாளர் விசுவநாதன், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் மண்டலக்குழுத் தலைவர் வே.கருணாநிதி, திருநீர்மலை த.ஜெயக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், ஆப்பூர் சந்தானம், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
- உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள முசரவாக்கம், அய்யங்கார் குளம், பாலு செட்டி சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள ஆண்கள் பொதுநல நோயாளிகள் பிரிவில் போதுமான டாக்டர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆண்கள் பொது நலப் பிரிவில் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே போதுமான டாக்டர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் கூறும் போது, காலை 6 மணி முதலே நோயாளிகள் ஓ.பி. சீட்டினை பெற்று மருத்துவம் பார்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். ஆனால் போதுமான டாக்டர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதனால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றனர்.
- மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். சிவில் என்ஜீனியர். மனைவி வித்யாலட்சுமி . தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆங்கிலத்தில் அதிகம் நாட்டம் மிகுந்த மாணவனாக திகழும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக விரைந்து படிப்பதில் திறமை வாய்ந்தவன்.
தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்து உள்ளார். மாணவனின் இந்த சாதனை நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ல்ட் சில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2025 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.