search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா
    X

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா

    • 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
    • 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.

    இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

    Next Story
    ×