search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய கல்விக் கொள்கை: மத்திய அரசு நிர்பந்தம்.. இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் - பொன்முடி
    X

    தேசிய கல்விக் கொள்கை: மத்திய அரசு நிர்பந்தம்.. இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் - பொன்முடி

    • குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது.
    • தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    தேசிய கல்விக்கொள்கையை [2020] ஏற்காததால் 2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தாமதமின்றி மாணவர்கள் நலனுக்காக இந்த தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சென்றடைய வேண்டும். தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம். பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×