search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடங்கியது- மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது
    X

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடங்கியது- மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது

    • மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.
    • இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜுன் 20-ந்தேதி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது.

    இன்றும், நாளையும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 10-ந்தேதி வரையும் 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ந்தேதி வரையும் நடைபெறும்.

    தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன.

    கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×