என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மாஞ்சோலையில் தொடரும் மழை
- பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.
பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.