search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் கடும் குளிர்: வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்
    X

    ஏற்காட்டில் கடும் குளிர்: வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்

    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணியளவில் சேலம் மாநகரில் திடீரென மழை பெய்தது.

    அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பஸ்நிலையம், அம்மாப்பேட்டை , ஜங்சன். கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியே சாலைகளில் சென்றனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 5 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இன்று காலையும் குளிர் நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக உள்ளதால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 5.6 மி.மீ. மழையும், ஓமலூரில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 7.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையை தொடர்ந்து நேற்றிரவு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    Next Story
    ×