search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாண்டஸ் புயல்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு... சென்னையில் பூங்காக்கள் மூடல்
    X

    மாண்டஸ் புயல்: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு... சென்னையில் பூங்காக்கள் மூடல்

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×