search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடை குறைப்பு சிகிச்சையில் மரணம்: மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்தது செல்லாது- உயர்நீதிமன்றம்
    X

    எடை குறைப்பு சிகிச்சையில் மரணம்: மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்தது செல்லாது- உயர்நீதிமன்றம்

    • மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை.
    • மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை.

    சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை சுகாதாரத்துறை தற்காலிகமாக ரத்து செய்தது

    மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை எனவும் அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ததை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்தது செல்லாது' என்று தீர்ப்பளித்தார்.

    மேலும், "மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கார்பரேட்டுகளாக மாறிய நிலையில் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகளை அங்கீகரிக்க வேண்டும்" என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    Next Story
    ×