என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முரசொலி செல்வம் மறைவு- அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி
- முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
- முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, முரசொலி செல்வம் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பிறகு, செய்தியளர்களிடம் பேசிய திருமாவளவன், "முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.
முரசொலி செல்வம் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், "கலைஞரின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிரதிபலிப்பவராக இருந்தார் முரசொலி செல்வம்" என்றார்.
முரசொலி செல்வம் உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " "திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு" என்றார்.
முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " நான் பொன்னர் சங்கர் படம் எடுத்தபோது 5 வருடங்களாக கலைஞரோடு இருந்தேன். அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அந்த நாட்களை மறக்கவே முடியாது" என்றார்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் அஞ்சலி செலுத்தினர். பிறகு பேசிய விஜயகுமார், " தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்து கடைசி வரை பணியாற்றியவர் முரசொலி செல்வம்" என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்