என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
- கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார பூஜைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததினால் பக்தர்கள் தங்கள் வந்த வாகனங்களை கோவில் அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி செல்வதால் அந்த பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு வெளியே வரமுடியாத நிலை உள்ளது.
இதனால் விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கோவில் அருகில் உள்ள தெரு இளைஞர்கள் தங்கள் தெருவுக்கு வரும் பாதைகளை அவர்களே பேரிகாட் அமைத்து தடுக்கின்றனர்.
மேலும் ஏராளமான வாகனங்கள் தெப்பகுளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்