என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழனி அடிவாரம் பகுதியில் இன்று திரண்ட பக்தர்கள் கூட்டம்.
பழனி கோவிலில் திரண்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 3 மணிநேரம் காத்திருப்பு
- ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
- பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் இன்று காலை முதல் அடிவாரம், மலைக்கோவில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கூட்டமே அதிகளவில் தென்பட்டது. இவர்கள் மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் பெரும்பாலும் பழனிக்கு வருகின்றனர். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.






