search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் எதிரொலி- காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. உத்தரவு
    X

    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் எதிரொலி- காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. உத்தரவு

    • திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
    • கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு கூறியிருப்பதாவது:

    * திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.

    * மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும்.

    * அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும்.

    * கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    * திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×