என் மலர்
தமிழ்நாடு
நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி... ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை விமர்சித்த ஜெயக்குமார்
- கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
- பண்ருடடி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரான பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க. அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அரசியல் ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்தது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்... 'நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம்'. அவருக்கு கட்சியே இல்லை. அடிப்படை உறுப்பினரே கிடையாது. அடிப்படை உறுப்பினரே இல்லாத ஒருவர், அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிக்கிறார் என்று சொன்னால், இந்த பழமொழியைத்தான் சொல்லவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், திமுகவும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து செயல்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.