search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 11,569 பேர் பங்கேற்க ஏற்பாடு- தா.மோ. அன்பரசன் தலைமையில் ஆலோசனை
    X

    தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 11,569 பேர் பங்கேற்க ஏற்பாடு- தா.மோ. அன்பரசன் தலைமையில் ஆலோசனை

    • ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.
    • வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்ற தி.மு.க.வில் பூத் ஏஜெண்டுகள் (முகவர்கள்) இப்போதே தயாராக உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தகுதியான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து (பி.எல்.ஏ.2) வைத்துள்ளனர்.

    அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க குறைந்தபட்சம் 21 பேர் முதல் அதிகபட்சம் 31 பேர் வரை தி.மு.க. நியமித்து வைத்துள்ளது.

    இந்த வாக்குச்சாவடி முகவர்களை மண்டல வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரம், காங்கேயம், திருவண்ணாமலையில் கூட்டம் நடந்த நிலையில் இப்போது திரு வள்ளூரில் நவம்பர் 5-ந்தேதி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் 11,569 முகவர்களுடன் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க குன்றத்தூரில் நேற்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் திருவள்ளூரில் நடைபெறும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வாகனங்கள் மூலம் திருவள்ளூருக்கு அழைத்து சென்று பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×