search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் ரவியிடம் தி.மு.க. பைல்ஸ்-2: அண்ணாமலை கொடுத்த புகாரில் இடம்பெற்ற 9 அமைச்சர்கள் யார்?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கவர்னர் ரவியிடம் தி.மு.க. பைல்ஸ்-2: அண்ணாமலை கொடுத்த புகாரில் இடம்பெற்ற 9 அமைச்சர்கள் யார்?

    • தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
    • ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. பைல்ஸ்-1 என்ற பெயரில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவர்களின் சொத்து பட்டியலை வீடியோ வாக வெளியிட்டார்.

    அதில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உள்ள சொத்து விவரங்களை பட்டியலிட்டு இருந்தார்.

    அதில் தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,478.18 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த வகையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

    இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாளைக்கு (வெள்ளி) 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தொடங்க உள்ள நிலையில், அண்ணா மலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஏராளமான ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    அதில் 9 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது பினாமி சொத் துக்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக எந்தெந்த வகை யில் பணம் சம்பாதித்தனர். அந்த சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது போன்ற விவரங்களை அதில் பட்டியலிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த 9 அமைச்சர்கள் யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பற்றி மட்டும் வெளியில் தெரிவிக்கப் பட்டது.

    மற்ற விவரங்களை நாளை தொடங்கும் பாத யாத்திரையின் போது அண்ணாமலை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு துறை வாரியாக ஆவணங்களை சேகரித்து அதில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர் என்ற விவரங்களை பட்டியலிட்டு அதை பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து கவர்னரிடம் அண்ணாமலை வழங்கி இருப்பதால் அடுத்த கட்டமாக கவர்னரின் நடவ டிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் இந்த ஊழல் புகார்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவர் பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து கவர்னர் தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. அவர் வழக்கு தொடர பரிந்துரைத்தால் 9 அமைச்சர்களும் விசார ணையை சந்திக்க நேரிடும்.

    இதனால் 9 அமைச்சர்க ளுக்கு எந்த நேரத்திலும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்படும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழ்நிலையில் 9 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதை எவ்வாறு கையாளுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வின் 2-ம் பாகம் சொத்து பட்டியல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

    Next Story
    ×