என் மலர்
தமிழ்நாடு
X
தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Byமாலை மலர்5 Sept 2023 2:53 PM IST
- வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது
- அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது
"இந்தியா" பெயர் "பாரத்" என மாற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! #IndiaStaysIndia
இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X