என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![devanathan yadav devanathan yadav](https://media.maalaimalar.com/h-upload/2024/08/18/4035928-devanathanyadav.webp)
வின் டிவி தேவநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- தேவநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தேவநாதனை வருகிற 28 ஆம் தேதி வரை (14 நாட்கள்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தேவநாதனுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவி போலீசார் சோதனை செய்தனர். மியிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகம் உள்பட 12 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 4 லட்சம் பணம், இரண்டு கார்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்ப்டடு இருக்கிறது.