search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வயதானோர் வரிசையில் நிற்க வேண்டியதில்லை: 23-ந்தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள்
    X

    வயதானோர் வரிசையில் நிற்க வேண்டியதில்லை: 23-ந்தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள்

    • 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
    • ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ந் தேதி வரை நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என 2000 ரூபாய் நோட்டு மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இதையொட்டி வங்கிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    வங்கிகளில் செய்யப்பட்டு வரும் சிறப்பு ஏற்பாடு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வருகிற 23-ந் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்படுகிறது.

    முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    கூட்டம் அதிகமானால் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு சாமியானா பந்தல் போட்டு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம்.

    பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×