search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடம்பூர் வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
    X

    கடம்பூர் வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

    • தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
    • மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.

    இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×