என் மலர்
தமிழ்நாடு

ஆலங்காயம் அருகே காயத்துடன் தவிக்கும் ஒற்றை கொம்பன் யானை- சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

- யானைக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பதால் அந்த யானையை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒற்றை கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
- யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யானையின் கால் வீக்கமாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகத்தில் உள்ள காவலூர் நாயக்கனூர் கிராம பகுதியில் ஒற்றை யானை சுற்றி திரிகிறது.
இந்த யானைக்கு ஒரே ஒரு தந்தம் மட்டும் இருப்பதால் அந்த யானையை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒற்றை கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை கொம்பன் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது.
இந்த யானையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யானையின் கால் வீக்கமாக உள்ளது.
யானை நடக்க முடியாமல் அவதிப்படுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் யானையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவற்றுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். காலில் காயத்துடன் சுற்றிவரும் ஒற்றை கொம்பன் யானைக்கு உரிய சிகிச்சை அளித்து அதை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.