என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/27/1827340-ttv.webp)
X
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்
By
மாலை மலர்27 Jan 2023 1:51 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார்
- 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
'தேர்தல் பணிகளை கவனிப்பதற்கு 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிவருகிறோம். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம்' என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
Next Story
×
X