என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல்- ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சென்னை விரைவு
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சென்னை விரைவு

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதன்படி ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×