search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் நடப்பது செயலாட்சி அல்ல பொய்யாட்சி - முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்.
    X

    தமிழகத்தில் நடப்பது செயலாட்சி அல்ல பொய்யாட்சி - முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்.

    • தமிழகத்தில் செயலாட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
    • சாராய சாம்ராஜ ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. இம்மாத துவக்கத்தில் தி.மு.க. ஆட்சி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் செயலாட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது அறிக்கைக்கு பதில் அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத ஆட்சியாக, போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய சாம்ராஜ ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது."

    "இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி 'செயலாட்சி' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சி என்பது பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது."

    "தமிழ்நாட்டில் செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 'செயலாட்சி' அல்ல. 'செயலற்ற ஆட்சி, 'பொய்யாட்சி' நடைபெற்றுக் கொண்டிருக்கிறது."

    "இந்த உண்மையை மறைத்து செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறும் மாண்புமிகு முதலமைச்சருக்கு 'மனமறிந்து பொய் பேசினால் மனதே நம்மைத் தண்டிக்கும்' என்ற குரளை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழ்நாட்டில் விரைவில் 'பொய்யாட்சி' தூக்கி எறியப்பட்டு 'செயலாட்சி' ஏற்படுத்தப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×