search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பார்முலா 4 கார் பந்தயம்- கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
    X

    பார்முலா 4 கார் பந்தயம்- கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

    • நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நடைபெறுகிறது.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

    இதைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கமல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதால் உற்சாகம். நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

    தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டகாவும் மாற்றியதற்கு முதல்வர், உதயநிதிக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், " சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது இந்தியாவிற்கே உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நாட்டில் முதன்முறையாக பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்தை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்" என்றார்.

    Next Story
    ×