என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோடம்பாக்கத்தில் வாலிபர் மீது தாக்குதல்: ரவுடிகள் 4 பேர் கைது
- மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார்.
- மது குடிக்க பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர்.
போரூர்:
சென்னை கோடம்பாக்கம், வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார். ஆனால் ரமேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் உடைத்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சரண், சோகன் ஜோசப், அவினாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story






