என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மாமல்லபுரத்துக்கு இன்று மாலை வருகை: ஜி20 நாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை பார்வையிடுகிறார்கள்
ByMaalaimalar26 July 2023 2:23 PM IST
- சென்னை வந்துள்ள “ஜி-20” நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள்.
- வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
சென்னை வந்துள்ள "ஜி-20" நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் புராதன சின்னம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் செல்லும் வழித்தடம், புராதன சின்னங்கள், உணவருந்தும் ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் "டிரோன்" கேமரா பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×