search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு
    X

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு

    • அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×