search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணியில் கடும் பனிமூட்டம்
    X

    திருத்தணியில் கடும் பனிமூட்டம்

    • ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது.
    • பூந்தோட்டங்களில் சென்று பூக்களை பறிப்பவர்கள் பனிமூட்ட இருட்டால் தவித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.

    காலை 9 மணி வரை புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மெதுவாக முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர். இதேபோல் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது.

    கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பூந்தோட்டங்களில் சென்று பூக்களை பறிப்பவர்கள் பனிமூட்ட இருட்டால் தவித்தனர். காலை 9 மணிக்கு பின்னர் பனி விலகிய பிறகே சகஜ நிலை திரும்பியது. மாண்டஸ் புயலுக்கு முன்னரும் இதேபோல் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் ஏற்பட்டு வந்தது. பின்னர் பலத்த மழை கொட்டியதால் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் பனிமூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. மழை ஓய்ந்தாலும் பனியின் தாக்கம் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×