என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தென் மாவட்டங்களில் கனமழை பாதிப்பு- கல்லூரி சான்றிதழ்களை பெற இணையதளம் அறிவிப்பு தென் மாவட்டங்களில் கனமழை பாதிப்பு- கல்லூரி சான்றிதழ்களை பெற இணையதளம் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/12/23/1996704-certi1.webp)
தென் மாவட்டங்களில் கனமழை பாதிப்பு- கல்லூரி சான்றிதழ்களை பெற இணையதளம் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதைதொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்பட முக்கிய ஆவணங்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இதை கருத்தில் கொண்டு, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.