search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை
    X

    சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை.
    • சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, எழும்பூர், பெரம்பூர், கெளத்தூர், வியாசர்பாடி, மாதவரம், புழல், அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சென்னை திருவொற்றியூர், எண்ணூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், கரூர், திருச்சி,நாகர்கோவில், திருப்பத்தூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கரூரில், குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளான ராஜேந்திரம், மருதூர், வதியம், அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கேட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×