என் மலர்
தமிழ்நாடு
X
சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Byமாலை மலர்25 Nov 2023 6:47 AM IST (Updated: 25 Nov 2023 9:34 AM IST)
- சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு
- திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.
குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X