search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஏமாற்றி மளிகை கடையில் பணம் பறித்த கணவன்-மனைவி கைது
    X

    கைதான சக்திவேல்-சத்தியபிரியா.

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஏமாற்றி மளிகை கடையில் பணம் பறித்த கணவன்-மனைவி கைது

    • உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
    • புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாராபுரம் சாலை களிமேடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சிவசாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 43). சம்பவத்தன்று தனலட்சுமி கடையில் இருந்தபோது அவரது கடைக்கு ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் காரில் வந்தனர்.

    அவர்கள் நாங்கள் கோவை மண்டல மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் என கூறியதுடன், உங்கள் கடையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்து கிறீர்களா, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துகிறீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    மேலும் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதறிப்போன தனலட்சுமி கடையில் இருந்த பணம் ரூ.2500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு அந்த 2 பேரும் காரில் ஏறி சென்றுவிட்டனர்.

    இதில் சந்தேகம் அடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்து பார்த்துள்ளார். அப்போது மற்ற கடைகளுக்கு இதுபோல் கூறி யாரும் வரவில்லை என கூறியதை அடுத்து தனலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்த கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

    அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் என ஏமாற்றி பணம் பறித்து சென்றது கோவையை சேர்ந்த சக்திவேல்(24), அவரது மனைவி சத்தியபிரியா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடை த்தனர். மேலும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், இது போல் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காங்கயம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×