search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்- தலைமைச்செயலாளர் உத்தரவு
    X

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்- தலைமைச்செயலாளர் உத்தரவு

    • அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
    • ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாச்சலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்படுகிறார். அவர் நில சீர்திருத்த இயக்குனர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி அலுவல் சாரா இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்படுகிறார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறிவியல் நகர தலைவர் மலர்விழி நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனரும், சமூக நல கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகித்த அமுதவள்ளி சமூக நல கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையின் கமிஷனராக ஜெயகாந்தன் மாற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

    ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறை நிறைவடைந்ததைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அதிகாரி பத்மஜா பொதுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளர் கஜலட்சுமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பண்டகசாலை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் லலிதா சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டு உள்ளார்.

    சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ஆனந்த் மோகனை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து செயல்படுவார். திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் ரிஷப் திருவண்ணாமலை கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×