search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
    X

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
    • வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனர் பிரதாப், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனர் ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் (கோவை) இணை கமிஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டார். அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×