என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பன்னாட்டு விமான முனையம் திறப்பு விழா: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் திருச்சி வருகை
- விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
- பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.
அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்