search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் பறக்கும்படை குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல் அதிகாரி திடீர் நடவடிக்கை
    X

    நீலகிரியில் பறக்கும்படை குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல் அதிகாரி திடீர் நடவடிக்கை

    • 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.
    • கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தற்போது தலா 9 பறக்கும் படை குழுக்கள், தலா 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைகளின் படி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதலாக தலா 3 பறக்கும் படை குழு க்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய வை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 3 நிலையான கண்காணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் தற்போது நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×