search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியாவில் முதல் நவீன ரெயில்: சென்னையில் தயாரிக்கப்படுகிறது
    X

    இந்தியாவில் முதல் நவீன ரெயில்: சென்னையில் தயாரிக்கப்படுகிறது

    • 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன.
    • ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும்.

    சென்னை:

    பயணிகள் ரெயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை சென்னையில் உள்ள ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியுள்ளது. இங்கு இந்தியாவிலேயே முதல் முறையாக 'புஷ்-புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும். 2 என்ஜின்கள் இருப்பதால் இந்த ரெயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். இந்த ரெயில் குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளை கொண்டிருக்கும்.

    இதில் 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் குலுங்காமல் செல்லும் என்பதால் பயணிகளுக்கு வசதியாக அமையும்.

    இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்த ரெயிலுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த ரெயில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்டிருக்கிறது. பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக நீண்ட தூர வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வந்தே பாரத் போன்ற ரெயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதை இந்த புதிய ரெயில் நோக்கமாக கொண்டு உள்ளது. இந்த ரெயில் பெட்டிகளை தொழில்நுட்ப அமைப்பினர் விரைவில் ஆய்வு செய்வார்கள். அடுத்த சில மாதங்களில் இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள இடங்களுக்கு இந்த ரெயில் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×