என் மலர்
தமிழ்நாடு
நீலகிரியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை- ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்
- காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
- நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும்.
ஊட்டி:
கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியானார்கள். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம். இந்த நோய் ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள தை அடுத்து தமிழக எல்லை யோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரி டீன் கீதா லட்சுமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் சுமாா் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கா்நாடகம், கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் நடவடி க்கை எடுத்து வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.