என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெடி பொருட்களை சப்ளை செய்தவர்கள் அடையாளம் தெரிந்தது- மாவு மில் அதிபரிடமும் விசாரணை
- வெடி பொருட்களை சப்ளை செய்தவர்களில் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
- மாவு மில் அதிபரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கோவை:
கோவை கார் வெடிப்பில் பலியான முபினுக்கு வெடி பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார்-யார்? என்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி வைத்துள்ள போலீசார் அதனை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இனி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்துவார்கள். அப்போது வெடி பொருட்களை சப்ளை செய்தவர்களில் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
இதற்கிடையே வெடி மருந்துகள் மற்றும் கரித்துகள்களை கோவையில் உள்ள மாவு மில் ஒன்றில் முபினும் அவனது கூட்டாளிகளும் அரைத்து வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த மாவு மில் அதிபரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Next Story






