என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
- அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
- அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு இன்று காலை வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் அனல் மின்நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அனல் மின் நிலையத்துக்கு தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே அந்த மின் உபகரணங்கள் தரமானதா என்றும் அவற்றின் விலை குறித்தும் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்காமல் சம்பளம் ஒதுக்கி முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுதொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அனல் மின்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சோதனை முடித்து வெளியே வந்தால்தான் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்று தெரியவரும்.