search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வைத்து பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது: ஜெயக்குமார்
    X

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வைத்து பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது: ஜெயக்குமார்

    • அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது.
    • தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?

    சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.

    அப்போது, "அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தெரிவித்தார்.

    மேலும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு வாக்கு சேகரித்ததற்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஏற்கனவே கண்டித்துள்ளார். அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பாஜக வெட்கப்பட வேண்டும்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.

    திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை

    தமிழகத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக எங்களை மிரட்ட நாங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்று அவர் தெரிவித்தார்

    Next Story
    ×