search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை
    X

    கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
    • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×