search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார்த்திகை தீப திருநாள் - பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
    X

    கார்த்திகை தீப திருநாள் - பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

    • தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.
    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

    இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அனுமதி வழங்கப்படும்.

    தமிழகத்தின் பல்வேறு மாட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மூன்று பிரதோஷங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமிக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததாலும் தொடர்மழை அறிவிப்பு காரணமாகவும், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்ற சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்திருந்தனர்.

    இந்நிலையில் தற்போது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் பவுர்ணமி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×