என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் இதுவரை 394 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
- நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும்.
- வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று மயிலாப்பூர், சித்திரக்குளம் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுப்புற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம்.
500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது.
இக்கோயிலின் சித்திரக் குளம், ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது, திருக்கோவிலுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினுடைய ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை வழங்கினார்கள்.
இந்து சமய அறநிலைத் துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசின் சார்பில் இதுவரையில் எந்த ஆட்சியும் வழங்கவில்லை. சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது, ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து சொத்துக்களை மீட்பது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறையாக கொண்டு வந்து சேர்ப்பது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள், கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்துதல் என்று பல்வேறு கோணங்களில் இந்த துறைக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கி வரும், முதல்-அமைச்சரின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம் என்றே கூறலாம்.
நேற்றைய தினம் மதுரை அழகர்கோயில் இராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 394 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல மீட்கப்பட்டுள்ள சிலைகளை அடையாளம் கண்டு அந்தந்த திருக்கோவிலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதற்குண்டான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்