search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    parithabangal - laddu
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    லட்டு வீடியோ - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப்பெறுகிறது பாஜக

    • பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.
    • பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது டிஜிபியிடம் தமிழக பாஜக புகார் அளித்தது.

    திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

    லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார்.

    இந்நிலையில், 'லட்டு' வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×