என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
காதல் ஜோடி தற்கொலை: வாலிபர் உடலை வாங்க மறுத்து கருப்பு கொடி கட்டி போராட்டம்
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
- உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.