என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மனு தள்ளுபடி
- சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
- சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
சென்னை:
தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.
2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.
அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.